99359989
சினிமாசெய்திகள்

படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் OTT இத்தனை கோடிக்கு விலைபோனதா?

Share

படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் OTT இத்தனை கோடிக்கு விலைபோனதா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.

இவரது திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் தயாரான இப்படம் இந்திய லெவலில் வெளியாகி சுமார் ரூ. 500 கோடி வரை இந்திய முழுவதும் வசூல் செய்தது.

வியாபாரம், விமர்சனம் இரண்டிலும் கலக்கிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தயாராகி விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்தியா, வெளிநாடு என படப்பிடிப்பு நடந்துவரும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அண்மையில் அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடினார், அன்று புஷ்பா 2 படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை செய்தது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகவும், தெலுங்கு திரையுலகில் ரூ. 100 கோடிக்கு ஓடிடி விற்பனை ஆகியிருப்பது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

127077758
பொழுதுபோக்குசினிமா

10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல்: பொங்கல் ரேஸில் மாஸ் காட்டும் ஜீவாவின் “தலைவர் தம்பி தலைமையில்”!

நடிகர் ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “தலைவர் தம்பி தலைமையில்”...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...