33 1
சினிமா

விஜய்யை நம்பியா இந்த நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பது? நடிகர் பிரகாஷ் ராஜ் ஓப்பன் டாக்

Share

நடிகர் தளபதி விஜய் தற்போது தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தங்கள் கட்சியின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யின் அரசியல் குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில், “விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிரபலமான இயக்குநர். அவர் தனது மகன் ஸ்டார் ஆவதற்கு முன்பாக நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். விஜய் அரசியலுக்கு புதியவர், அவரை நான் அறிந்தவரையில் நாங்கள் அரசியலை பற்றி தீவிரமாக பேசியதில்லை. தனக்கு இருக்கும் பிரபலத்தின் காரணமாக அவர் அரசியலுக்கு வந்து இருக்கிறார்.

பவன் கல்யாணும் அப்படிதான். விஜய்கோ, பவன் கல்யாணுக்கோ நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து தெளிவான பார்வை இல்லை, புரிதலும் இல்லை. பவன் தனது கட்சியை துவங்கி பத்து வருடங்கள் தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருந்ததே இல்லை. அதேபோல் விஜய்யிடமும் அரசியல் குறித்து தெளிவான பார்வை இல்லை.

விஜய்யோ அல்லது பவன் கல்யாணோ தேர்தலில் ஒரு சில இடங்களை பெறலாம். ஆனால், அதற்கு பிறகு தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும்போது வசனங்களை கேட்பதுபோல் தான் இருக்கிறது. அவருக்கு ஆழமான புரிதலே இல்லை. இவரை நம்பியா இந்த நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பது” என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...