மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

9

மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

சன் டிவியில் சீரியல்கள் முடிவதும், புதிய சீரியல்கள் களமிறங்குவதும் புதியது அல்ல.

அண்மையில் சன் தொலைக்காட்சியின் இனியா தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது, விரைவில் முடிந்துவிடும். அடுத்தடுத்து சில சீரியல்களை முடிக்க சன் டிவி முடிவு செய்துள்ளது.

அதேபோல் சமீபத்தில் களமிறங்கிய மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் களமிறங்க இருக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கனா காணும் காலங்கள் தொடரின் நாயகன் பரத் மற்றும் அயளி தொடரில் நடித்த அபி நக்ஷத்ரா இருவரும் ஜோடியாக நடிக்க புதிய தொடர் தயாராகி வருகிறதாம்.

மற்றபடி இந்த தொடர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Exit mobile version