Rajinikanth Coolie Movie Famous Actor Joining 66d041341ea32
சினிமா

கூலி திரைப்படத்தில் இணையும் மஞ்சுமல் பாய்ஸ் பிரபலம்… தெறிக்கும் எதிர்பார்ப்பு… இதோ புகைப்படம்!

Share

கூலி திரைப்படத்தில் இணையும் மஞ்சுமல் பாய்ஸ் பிரபலம்… தெறிக்கும் எதிர்பார்ப்பு… இதோ புகைப்படம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஆர்வத்தை கூட்டுகிறது. இந்நிலையில் தற்போது இன்னுமொரு அப்டேட் கிடைத்துள்ளது.

ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம் , நடிகர் அமீர் கான் என பலர் கூலி படத்தில் இணைந்துள்ளனர் என தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

படத்தில் நடிக்கப்போகும் கதாபாத்திரங்கள் குறித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்திருக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...