10 28
சினிமா

மணிமேகலை மீது இவ்ளோ வன்மம்.. குக் வித் கோமாளி லேட்டஸ்ட் ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Share

மணிமேகலை மீது இவ்ளோ வன்மம்.. குக் வித் கோமாளி லேட்டஸ்ட் ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

விஜய் டிவி குக் வித் கோமாளி 5 ஷோவில் இருந்து சமீபத்தில் மணிமேகலை வெளியேறினார். அதற்கு காரணம் பிரியங்கா தான் என வர குற்றம்சாட்டி இருந்தார்.

இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாக அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். மாகாபா ஆனந்த் தொடங்கி புகழ் வரை ப்ரியங்காவுக்கு சப்போர்ட் செய்தனர்.

அவர்களை சொம்பு என குறிப்பிட்டு மணிமேகலை பதிலடி கொடுத்தார். அதற்கு செருப்பு போட்டோவை பதிலடியாக பதிவிட்டார் மாகாபா ஆனந்த். இப்படி நாளுக்கு நாள் மணிமேகலை vs பிரியங்கா கேங் சண்டை சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வார எபிசோடின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலை போல புகழ் மற்றும் பிரியங்கா போல ராமர் ஆகியோர் பேசி, அந்த சம்பவத்தை கலாய்ப்பது போல பேசி காட்டி இருக்கின்றனர்.

இதை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது.

மணிமேகலை மீது இருக்கும் வன்மத்தை இப்படி காட்டி இருக்கிறார்கள் என CWC நடத்தும் நிறுவனம் மற்றும் விஜய் டிவியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...