சினிமாசெய்திகள்

பிரபாஸுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா

Share
24 667a9f977af53
Share

பிரபாஸுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் பிரபாஸ். குறிப்பாக பாகுபலி திரைப்படத்திற்கு பின் பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.

அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. இப்படம் வருகிற 27ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபாஸ் கைவசம் உள்ள திரைப்படங்களில் ஒன்று ராஜா சாப். மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக இவர் நடிப்பில் தங்களான் திரைப்படம் வெளிவரவுள்ளது. சீயான் விக்ரம் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
2 6
இலங்கைசெய்திகள்

ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ள கொழும்பின் வாகன திருட்டுக்கள்

வாகன திருட்டுகள் தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியில்...

1 6
இலங்கைசெய்திகள்

மிகப் பெரும் பொய்யரை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்! நாமல் ராஜபக்ச

இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை...

3 6
இலங்கைசெய்திகள்

அநுரவை நெருக்கடிக்குள் தள்ளும் அரசியல்வாதிகள்! அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

திருடர்களை பிடிக்கப் போவதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய்...

4 6
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் : அதிர்ச்சியில் பெண்கள்

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும்...