24 66f8ce3f915ac
சினிமா

9 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

9 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமாவர் ஹரிஷ் கல்யாண். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் லப்பர் பந்து.

இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் மாஸான கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், ஜென்சன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் லப்பர் பந்து திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் லப்பர் பந்து திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 11.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...