விஜய் போலவே மாணவர்களை சந்தித்து பரிசு கொடுத்த லெஜண்ட் சரவணன்
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கடந்த ஆண்டு வெளிவந்த லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை என்றாலும், ஓரளவு வசூல் செய்தது. இப்படத்தை தொடர்ந்து லெஜண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்திற்காக கதை கேட்டு வருகிறார் என ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் இரண்டாவது அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று சுதந்திர தினத்தில் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார்.
சமீபத்தில் விஜய் 10 மற்றும் 12 வகுப்பில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அதே போல் தற்போது வளர்ந்து வரும் மாணவர்களை அழைத்து பரிசு வழங்கி அவர்களுடன் நடனம் கூட ஆடியுள்ளார் லெஜண்ட்.
அதுமட்டுமின்றி தான் அடுத்த நடிக்கப்போகும் படத்திற்கான கதையை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
1 Comment