17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

Share

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணா மீது பொலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தலைமறைவாக இருந்த இவர் தற்பொழுது பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. நடிகர் கிருஷ்ணா, பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் தனது இயல்பான நடிப்புத் திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றிருந்த நிலையில், இப்போது அவர் மீது எழுந்துள்ள போதைப்பொருள் வழக்கு தமிழ் திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பொலீஸார் தற்போது ஆராய்ந்து வரும் முக்கிய அம்சங்களில் ஒன்று, “Code word” என்ற சொல்லின் பின்னணியில் உள்ள அர்த்தம் தான். நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகள் தொடர்பாக தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன், நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் “Code word”-ல் நடிகர் கிருஷ்ணா தகவல்கள் பரிமாற்றம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலீஸார் அந்த Code word”-க்கான அர்த்தம் என்ன?, போதைப் பொருள் தொடர்புடையதா? என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...