நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹிரா.
பஹிரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பின் இறுதி ஏழு நாட்கள் தொடர்பில் இயக்குநர் ஆதித் ரவிச்சந்திரன் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் கூறிய கருத்துக்கள்தான் திரையுலகில் தற்போது பேசுபொருள்.
பிரபுதேவாவின் பஹிரா படத்தில்நாயகிகளாக அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு அனுபவங்கள் தொடர்பில் இயக்குநர் ஆதித் ரவிச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
படத்தில் கதாநாயகிகளே இல்லை. அனைவரும் திறமையான நடிகர்கள். அமைராவிற்கு பிரபு தேவாவுக்கும் நிறைய காம்பினேஷன் சீன்கள் இருக்கிறது. அமைராவிற்கு தமிழ் தெரியாது. ஆனால், நான் சொன்னதை கேட்டு திறமையாக நடித்தார்.
பஹிரா திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் பிரபு தேவா மாஸ்டர் தான். அவரிடம் சீன் சொல்லி நடிக்க சொல்ல பயமாக இருந்தது. என் பயத்தை போக்கினார். பஹிரா படத்தின் கடைசி 7 நாட்களை மறக்க முடியாது என அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
Leave a comment