tamilni 644 scaled
சினிமாசெய்திகள்

‘கொட்டுக்காளி’ படத்திற்கு சர்வதேச அரங்கில் கிடைத்த அங்கீகாரம்! குவியும் பாராட்டுக்கள்

Share

‘கொட்டுக்காளி’ படத்திற்கு சர்வதேச அரங்கில் கிடைத்த அங்கீகாரம்! குவியும் பாராட்டுக்கள்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக  பட்டையை கிளப்பி வந்த நடிகர் சூரி, தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து அவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

அதன்படி, நடிகர் சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில்  நடிப்பதற்காக நடிகர் சூரி தன்னையே வருத்தி பல முயற்சிகளையும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி  நடிக்கும், ‘கொட்டுக்காளி’ திரைப்படம் சர்வேதேச அரங்கில் பாராட்டுகளை குவித்துள்ள சம்பவத்தை சிவகார்த்திகேயன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதாவது, கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி என சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவில், பெர்லினாலே மற்றும் நம்பமுடியாத சில பதில் நம் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை விட்டுச் சென்றது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்களும் அங்கீகாரமும் படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...