6 47 scaled
சினிமா

நண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள்

Share

நண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள்

தனது இசையால் பலரின் மனதை வென்று இன்றும் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தமான இவர் இந்த ஆண்டு வெளிவந்த ராயன், அயலான் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார்.

இவரது மகள் கத்தீஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மின்மினி. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கத்தீஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில், ரஹ்மான் சாரின் மகள் என்பதால் உங்களிடம் வந்து பலர் பேசுவார்களே அதை எப்படி நீங்கள் அடையாளாம் கண்டு பிடிப்பீர்கள், என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறுவயதில் முதல் எண்னிடம் பலர் வந்து பேசுவர், ஆனால் நான் அவர்கள் டைப்பாக இருக்கமாட்டேன், இருப்பினும் நான் ரஹ்மான் மகள் என்பதற்காக பழகுவார்கள் அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

ஆனால், தற்போது நான் இசையமைத்த படம் வெளிவந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரோகினி திரையரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் என்னை ரஹ்மான் மகள் என்று பார்க்காமல் கத்தீஜாவாக பார்த்தார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என அந்த பேட்டியில் கூறினார்

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...