தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவரது 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயார் ஆகி இருப்பதாக கூறப்டுகிறது.
குட் பேட் அக்லி படத்திற்கு ஹீரோயினை இன்னும் தேர்வு செய்யவில்லையாம், அது தொடர்பாக பல ஹீரோயின்களிடம் பேச்சு வருகிறதாம். அந்த ஹீரோயின் லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.