விஜய்க்காக லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்.. துணை நிற்க போகும் கமல்!

விஜய்க்காக லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்.. துணை நிற்க போகும் கமல்!

விஜய்க்காக லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்.. துணை நிற்க போகும் கமல்!

விஜய்க்காக லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்.. துணை நிற்க போகும் கமல்!

லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர தொடர்ந்து பல அப்டேட்ஸ் வெளியாகிறது.

இப்படத்தில் கமல் ஹாசன் நடிக்கிறார், லியோ பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என வெளியாகவுள்ளது என தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது.

இந்நிலையில், இதுகுறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. லியோ தற்போது ஒரே ஒரு பார்ட் தான் எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால், லியோ பார்ட் 1ல் லியோ 2வுக்கான விஷயத்தை வைத்துள்ளார்களாம். லியோ படத்திற்கு பின் லோகேஷ் கமிட் செய்து வைத்திருக்கும் படங்களை முடித்துவிட்டு லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என தெரிவிக்கின்றனர். இதனால் தற்போது வரை லியோ முதல் பாகம் மட்டுமே தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் கமல் ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

ஆனால், கமல் ஹாசன் லியோ முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடிக்கவில்லை என்றும், கண்டிப்பாக லியோ இரண்டாம் பாகத்தில் கமல் என்ட்ரி கொடுக்க வைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன சர்ப்ரைஸ் எல்லாம் லோகேஷ் வைத்துள்ளார் என்று.

Exit mobile version