4 50
சினிமாசெய்திகள்

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

Share

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் 2019ல் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி.

இப்படத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். அறிமுக படத்திலேயே தனது வெற்றியை பதித்து, தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு, ஆர்.ஜே. ஆனந்தி என பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜெயம் ரவி கிடையாதாம். ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் விருப்பப்பட்டு, அவரிடமும் கூறியுள்ளார். ஆனால், ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து காரணத்தை கூறிய ஆர்.ஜே. பாலாஜி, “இவ்வளவு பெரிய படத்தில் நான் ஹீரோவாக நடித்தால், கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் ஒரு படத்தில் கூட ஹீரோவாக நடிக்கவில்லை” என்றும், அதனால் தான் கோமாளி பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...