அஜித்துக்கு இது தான் பிரச்சினையா? மேலாளர் சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்

tamilni 145

அஜித்துக்கு இது தான் பிரச்சினையா? மேலாளர் சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் நடிகர் அஜித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் திகதி முதல் அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக அஜித் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார். இதற்கு வழக்கமாக எடுக்கப்படும் உடற் பரிசோதனைக்காக தான் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை தவிர வேறு எந்த பிரச்சினையும் அஜித்தின் உடலில் இல்லை என அவர் தெரிவித்தார். இதன் காரணமாக ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளார்கள்.

 

Exit mobile version