சூர்யாவின் கங்குவா பட டிரைலரை கவனித்தீர்களா, கார்த்தியா இது?.. தனது அண்ணனுக்காக அவர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்

3 19

சூர்யாவின் கங்குவா பட டிரைலரை கவனித்தீர்களா, கார்த்தியா இது?.. தனது அண்ணனுக்காக அவர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் 10,000க்கும் அதிகமான திரைகளில் வெளியாக இருப்பாக கூறப்படுகிறது.

நின்ற சீதா திருமணம், வக்கீல் பரந்தாமன் சொன்ன விஷயம், கேஸ் வாபஸ் வாங்குகிறாரா விஜயா… சிறகடிக்க ஆசை புரொமோ

இந்த நிலையில் சூர்யாவின் கங்குவா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கீழே வரும் புகைப்படத்தில் இருப்பது கார்த்தி தான் என்றும் மிகவும் ஸ்பெஷலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு தனது சினிமா பயணத்தில் இதுவரை செய்யாத விஷயத்தை அதாவது புகைப்பிடிப்பதை அவர் இந்த படத்திற்காக செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Exit mobile version