24 66f8d42d80a2c 1
சினிமா

விஜய்யுடன் இணைகிறாரா அஜித், ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

Share

விஜய்யுடன் இணைகிறாரா அஜித், ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

தளபதி 69 தான் நடிகர் விஜய்யின் கடைசி என அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான ஹெச். வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. சமந்தா, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளின் பெயர்கள் கதாநாயகி லிஸ்டில் அடிபட்டு வந்த நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

அதன்படி, மலையாள திரையுலகில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தளபதி 69ல் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

மஞ்சு வாரியர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூட, துணிவு படத்தில் ஹெச். வினோத்துடன் பணியாற்றி வந்தபோது, ‘நீங்க நல்ல நடிக்க மற்றொரு படம் தருகிறேன்’ என ஹெச். வினோத் தன்னிடம் கூறியதாக மஞ்சு வாரியர் பேசியுள்ளார். ஏற்கனவே தளபதி 69ல் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்கிற பேச்சு உலாவ துவங்கிய நிலையில், மஞ்சு வாரியரின் பேட்டியும் வைரலாகி வருகிறது.

நடிகை மஞ்சு வாரியர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அஜித்துடன் துணிவு மற்றும் தற்போது ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...