இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை மமிதா பைஜூ இளையராஜாவின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
சோனி நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணையில், மேல்நீதிமன்ற நீதிபதியிடம் இளையராஜா தரப்புச் சட்டத்தரணிகள், “‘டியூட்’ திரைப்படத்திலும் இளையராஜாவின் 2 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்ட நீதிபதி, “விருப்பமிருந்தால் இதற்கும் தனியாக ஒரு வழக்குத் தொடருங்கள்” என்று கூறியிருக்கிறார்.
இந்தச் சூழலில், ‘டியூட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை அனுமதி இன்றிப் பயன்படுத்தியதற்காக இளையராஜா தரப்பு வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.