17486943201
சினிமாசெய்திகள்

வெற்றியடையாமல் விடமாட்டேன்..! அடுத்த வேட்டைக்குத் தயாராகும் அஜித்குமார்..!

Share

தமிழ் சினிமாவில் ‘தல’ என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் அஜித் குமார், தனது சினிமா வாழ்க்கையைத் தாண்டி மோட்டார் ரேஸிலும் தனது தனித்துவத்தை நிலைநாட்டி வருகின்றார். தற்போது அவர் மீண்டும் ஒரு ரேஸில் களமிறங்க தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் குமார் தற்போது பிரான்ஸின் புகழ்பெற்ற பால் ரிச்சர்ட்டில் நடைபெறவுள்ள GT3 கார் ரேஸுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். அவரின் சமீபத்திய போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே பல்வேறு சர்வதேச ரேஸிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ள அஜித், தற்போது GT3 வகை ரேஸிங் போட்டிக்கு தயாராகவுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரேஸில் பங்கேற்கும் முன்னோட்ட பயிற்சிகள் தற்போது பால் ரிச்சர்ட் ரேஸ் டிராக்கில் நடந்து வருகின்றது. அஜித் அங்கு ரேஸிங் உடையில், தனது வாகனத்துடன் தயாராகியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...