Krithi Shetty photoshoot
சினிமாசெய்திகள்

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

Share

க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்!

க்ரித்தி ஷெட்டியுடன் ஜோடியாக நடிக்கபோவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதற்கான பின்னணி காரணத்தையும் அவர் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தவிர தென்னிந்திய படங்களிலும், பாலிவுட்டிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி அனைத்து மொழிகளிலும் தனக்கென தனியாக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் தெலுங்கில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டடித்த படம் உப்பென்னா.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் அப்போது விளக்கினார்.

விஜய் சேதுபதி கூறியதாவது
“நான் உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் க்ரித்தி ஷெட்டியின் தந்தையாக நடித்தேன். எனவே இவருடன் நான் எப்படி ரொமாண்டிக்காக நடிக்க முடியும் என கூறி வேண்டாம் என கூறினேன்.

உப்பென்னா படத்தில் நடித்தபோது நானும் அவரும் தோன்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிப்பதில் க்ரித்தி ஷெட்டி சிரமம் அடைந்ததை பார்த்தேன்.

பின் அவரை அழைத்து உங்கள் வயதில் எனக்கு மகன் இருக்கிறார். நீங்களும் எனக்கு மகள் போன்றுதான் என்று கூறினேன்.அதன் பின்னர் அவர் எந்த பயமும் இல்லாமல் சிறப்பாக நடித்தார்.

க்ரித்தி ஷெட்டியை மகள் போன்றுதான் நினைக்கிறேன். எனவே அவரை எனக்கு ஹீரோயினாக நினைத்து கூட பார்க்க முடியாது” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...