டபுள் எவிக்‌ஷனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் மற்றும் ரவீனாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

tamilni 521

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்து 90 நாட்களைக் கடந்துள்ள நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்பே ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் வெற்றிபெற்ற விஷ்ணு, முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.தொடர்ந்து கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்தது. இதில் கடைசி 2 இடங்களை பிடித்த நிக்சன் மற்றும் ரவீனா ஆகியோர் இந்த வாரம் எலிமினேட் ஆகினர்.

இந்த நிலையில், எலிமினேட் ஆன நிக்சன் மற்றும் ரவீனாவின் சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ரவீனாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் 90 நாட்களுக்கு அவருக்கு மொத்தமாக ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நிக்சனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அதன்படி மொத்தம் அவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 90 நாட்களுக்கு அவருக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version