MediaFile 4
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் ட்ரெய்லரில் கூகுள் ஜெமினி லோகோ: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தளபதி விஜய் பட சர்ச்சை!

Share

தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு தொழில்நுட்பத் தவறு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஒரு நபர் துப்பாக்கியை ஏந்தியிருக்கும் காட்சியில், கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஜெமினி (Google Gemini AI) சின்னம் (Logo) இடம்பெற்றிருப்பதை இரசிகர்கள் மிக நுணுக்கமாகக் கவனித்துக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தவறு சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படத் தொடங்கியவுடன், படக்குழுவினர் உடனடியாக அந்தச் சின்னத்தை டிஜிட்டல் முறையில் நீக்கிவிட்டு, புதிய ட்ரெய்லரை அப்டேட் செய்தனர்.

படக்குழுவினர் விரைவாகச் செயல்பட்ட போதிலும், அதற்குள் நெட்டிசன்கள் அந்தப் பகுதியைத் திரைப் பதிவு (Screen Record) செய்து வைரலாக்கியுள்ளனர்.

“சினிமாவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தப்பில்லை, ஆனால் ஒரு காட்சியை முழுமையாக எடிட் செய்யாமல், நிறுவனத்தின் லோகோ தெரியுமளவுக்கு வெளியிட்டது சினிமா கலைக்கே அவமானம்” எனச் சிலர் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

அதேவேளை, இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு விளம்பர உத்தியா அல்லது கவனக்குறைவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய்யின் கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜன நாயகன்’, முழுக்க முழுக்க அரசியல் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளைக் கொண்ட படமாக இருக்கும் என்பதை இந்த ட்ரெய்லர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...