24 66457f20890cb
சினிமாசெய்திகள்

விஜய்யின் GOAT OTT உரிமையில் ஏற்பட்ட பெரும் ஏமாற்றம், இவ்ளோ குறைந்ததா

Share

விஜய்யின் GOAT OTT உரிமையில் ஏற்பட்ட பெரும் ஏமாற்றம், இவ்ளோ குறைந்ததா

தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரம்மாண்ட பொருட் செலவில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், விஜய்யின் GOAT OTT உரிமை குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் GOAT படத்தின் OTT உரிமையை ரூ. 150 கோடிக்கு விருப்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது அமேசான் ப்ரைம் OTT நிறுவனம் ரூ. 140 கோடிக்கு GOAT படத்தை வாங்க முன் வந்துள்ளது.

ஆனால், தயாரிப்பு நிறுவனம் ஒரு ரூபாய் கூட குறைக்க முடியாத என கூறிவிட்டதால், அந்த OTT நிறுவனம் பின்வாங்கிவிட்டனர். இதன்பின் பல OTT தளங்களில் GOAT படத்தை விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்துள்ளது. ஆனால், எந்த நிறுவனமும் முன் வரவில்லை.

GOAT படத்தின் OTT உரிமையை வாங்க எந்த OTT நிறுவனமும் முன் வராததால், இறுதியில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 110 கோடிக்கு OTT உரிமையை கொடுத்துள்ளனர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...