1 12
சினிமாசெய்திகள்

திரையரங்கில் வசூலை வாரி குறித்த கருடன்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா

Share

திரையரங்கில் வசூலை வாரி குறித்த கருடன்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா

சூரி கதாநாயகனாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷ்ணி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த கருடன் திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.

திரையரங்கில் சக்கப்போடு போட்ட கருடன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் OTT-யில் வெளியாகும் என்கின்றனர்.

இப்படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. கருடன் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் அடுத்ததாக கொட்டுக்காளி, விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...