tamilni 2 scaled
சினிமாசெய்திகள்

இன்னும் நாலு சாத்து சாத்துங்க முத்து..!! இதுதான் சாக்குனு மீனாவை கண்டபடி தரம்கெட்டு பேசிய விஜயா! ரவியின் முடிவு?

Share

இன்னும் நாலு சாத்து சாத்துங்க முத்து..!! இதுதான் சாக்குனு மீனாவை கண்டபடி தரம்கெட்டு பேசிய விஜயா! ரவியின் முடிவு?

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், வாசுதேவன் மீனா மீது திருட்டுப்பழியை போட, முத்து பொறுமையாக மீனா அப்படி செய்திருக்க மாட்டா என்று எடுத்துச் சொல்லுகிறார். ஆனால் வாசுதேவன் மீனா நகை திருடியதை என் கண்ணால் பார்த்ததாக சொல்லி, உங்க குடும்பத்தை பத்தி நல்லாவே தெரியும். மீனா தம்பி கூட உங்க வீட்டுல பைக்க திருடினவன் தானே அதுக்கு பிறகு தானே இந்த கல்யாணம் நடந்துச்சு. உங்க அப்பா, அம்மா இந்த மாதிரி வளர்த்து வச்சிருக்காங்க. பூக்கடை வச்சு இருக்கா தானே. அதுவும் பத்தலனா பிச்சை எடுக்க வேண்டியதுதானே என அவமானப்படுத்தி பேச, பொறுமையை இழந்த முத்து வாசுதேவன் கன்னத்தில் பளார் என அறைகிறார்.

இதை பார்த்து அண்ணாமலை முத்துவை பொறுமையாக இருடா என பிடித்து நிற்கவைக்க, இவ்வளவு நேரம் பொறுமையா தானேப்பா இருந்தன். அந்த ஆள் என்ன எல்லாம் பேசுறான் என கோபப்படுகிறார். விஜயாவும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு என்று மீனாவின் குடும்பத்தை அவரும் சேர்ந்து அவமானப்படுத்துவது போல பேச, இதுதான் சாக்குனு அவங்கள அப்படி பேச வேணாம்னு சொல்லுப்பா என முத்து கோபப்படுகிறார்.

அங்கு வந்த ரவியும், ஸ்ருதியும் என்ன நடந்தது என்று தெரியாமல் எங்க அப்பா மேல் எப்படி கைய வைக்கலாம் என்று கோபப்படுகிறார் ஸ்ருதி. அண்ணாமலை இங்க என்ன நடந்துன்னு தெரியாம பேசாதம்மா என்று சொல்ல, என்ன வேணும் என்டாலும் நடந்திருக்கட்டும். அவர் எப்படி எங்க அப்பாவ அடிக்கலாம் என்று கோபப்பட, நாங்க இங்க வந்தது தப்புதான் என்று மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார் முத்து.

பிறகு பேசிப் பேசியே பிரச்சினை பெருசாகியது வாசுதேவன் தான் இந்த பிரச்சனை இதோட விடலாம் என்று அண்ணாமலை சொல்லுகிறார். வாசுதேவன் மனைவி இதுக்குத்தான் அந்த குடிகாரன் வரக்கூடாதுன்னு சொன்னேன். இப்ப எல்லாருக்கும் முன்னாடி எங்க மானம் போச்சு, எங்க சொந்தக்காரர்கள் முன்னால் அப்படியே கைய வச்சிட்டான். அவன் இருக்க வீட்டுல எப்படி எங்க பொண்ண வாழ அனுப்புறது என சொல்ல, வாசுதேவன் ஸ்ருதியிடம் சென்று உனக்காக ஆசை ஆசையா எல்லாம் பாத்து பாத்து பண்ணா அவன் இப்படி என்னை அவமானபடுத்திட்டான். அவங்க வீட்டுக்கு நீ போகணுமான்னு யோசி என சொல்கிறார்.

இதை தொடர்ந்து எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கலாம் ஸ்ருதிய கூட்டிட்டு வா என ரவியிடம் அண்ணாமலை சொல்ல, நான் வர இல்லை என்று சொல்லி ரூமுக்குள் சென்று விடுகிறார் ஸ்ருதி.

அதன் பிறகு நீ சமாதானப்படுத்தி பேசி கூட்டிட்டு வா என்று அண்ணாமலை ரவியிடம் சொல்லிவிட்டு கிளம்ப, விஜயா ஸ்ருதியிடம் பேச முடியாமல் போகிறது. ரோகிணி நல்ல வேலை பெரிய பிரச்சனை நடந்திருக்கு இதுல என்னை மறந்திடுவாங்க என்று சந்தோஷப்படுகிறார்.

வீட்டுக்கு வந்த விஜயா உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். மனோஜ் அங்கேயே சாப்பிடல சாப்பாடு ஏதாவது ஓடர் பண்ணவா என கேட்க, இப்போ உனக்கு சாப்பாடு தான் முக்கியமான கோபப்படுகிறார். அந்த குடிகாரனை கூப்பிட வேணாம் என்று படிச்சு படிச்சு சொன்னா யாராவது பேச்சை கேட்டீங்களா. சம்பந்தி வீட்டுக்காரர் முன்னாடி மானம் மரியாதை எல்லாம் போச்சு. இனி எப்படி பேசுவேன் எனக்கு எப்படி மரியாதை கொடுப்பாங்க என ஆவேசப்படுகிறார்.

அண்ணாமலை வீட்டுக்கு வந்ததும் இப்போ உங்களுக்கு சந்தோஷமா என விஜயா கோவப்பட, இவன் எப்படி அவருக்கு கைநீட்டி அடிக்கலாம்? மீனா குடும்பத்துக்கு இது என்ன புதுசா என பேச, விஜயாவை திட்டுகிறார் அண்ணாமலை.

நீ நம்ம வீட்டு நகைன்னு சொன்னதுக்காகவே தாலிய கழட்டி உன் கிட்ட கொடுத்துட்டு மஞ்சள் கயிறு போட்டுக்கிட்டு இருந்தவ மீனா. அப்படி இருக்கிறவ திருடுவாளா நீ எல்லாம் பேசாத வாய் அழுகிடும் என கோபப்படுகிறார். நான் ரவி கிட்ட பேசுறேன் என்று அண்ணாமலை ரூமுக்கு வருகிறார்.

ரவிக்கு போன் பண்ணி ஸ்ருதிய சமாதானம் செய்து வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று ரவிக்கு சொல்ல, எனக்கு மட்டும் எதுக்கு மாறி மாறி பிரச்சனை வருது. யாரோ பண்ண தப்புக்கு நான் எதுக்கு கஷ்டப்படணும் என்று பேச, நீ வீட்டுக்கு வா எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் என சொல்ல, அங்க வரணுமா என தோணுது என்று ரவியும் அதிர்ச்சி கொடுக்கிறார். அப்போ உனக்கு நாங்க எல்லாம் வேண்டாமா என்று கேட்க, எனக்கு தெரியலப்பா அப்புறம் பேசுறேன் என போனை வைத்து விடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...