நடிகர் சல்மான் கான் நாளை தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்காக பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்கு செடிகளுக்கு இடையே இருந்த பாம்பு ஒன்று சல்மான் கானைக் கடித்ததுள்ளது.
இதையடுத்து அவர் கமோதில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். நடிகர் சல்மான் கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கடித்த பாம்பு விஷமில்லாதது என தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
#CinemaNews