முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே.
சமீபத்தில் மிகவும் ஆடம்பரமாக நடந்த அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியிலிருந்து அவர் செய்திகளில் இருக்கிறார்.
ஆனால் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் தெரியுமா?
முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும், இந்தியாவில் விலை உயர்ந்த வீடு வைத்திருப்பது உண்மைதான். அவருடைய வீடு எந்த அரண்மனைக்கும் குறைந்ததல்ல.
அம்பானியின் வீட்டின் பெயர் ஆன்டிலியா (Antilia). மும்பையில் இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 15,000 கோடி என கூறப்படுகிறது.
நீதா அம்பானியின் விருப்பத்திற்கு இணங்க, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அண்டிலிஸ் தீவின் நினைவாக இந்த வீட்டிற்கு Antilia என பெயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆன்டிலியாவில், 27 மாடிகள் கொண்ட சொகுசு வீட்டில், முகேஷ் அம்பானி தனது தாயார் கோகிலா பென், மனைவி நீதா, இரண்டு மகன்கள் ஆகாஷ்-ஆனந்த், மருமகள் ஷ்லோகா மற்றும் பேரன் பிருத்வி அம்பானி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அம்பானி ஆண்டிலியாவை நிர்வகிக்க சுமார் 600 பணியாளர்களை நியமித்துள்ளார். இங்கு பெரும்பாலானோர் 24×7 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அம்பானி குடும்பத்தினரும் ஊழியர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகின்றனர்.
தோட்டக்காரர்கள், எலக்ட்ரீஷியன்கள், பாதுகாவலர்கள், பிளம்பர்கள், ஓட்டுநர்கள், வேலையாட்கள், சமையல்காரர்கள் என மொத்தம் 600 பேர் முழுமையாக பராமரிப்பு செய்கிறார்கள். பலர் அந்த வீட்டிலேயே இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிலியாவின் 6வது மாடியில் ஒரு கேரேஜ் உள்ளது, இதில் ஒரே நேரத்தில் 168 கார்களை நிறுத்த முடியும். இந்த கார்களை சர்வீஸ் செய்ய 7வது மாடியில் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அம்பானி வீட்டில் உள்ள ஊழியர்கள் நாட்டிலேயே சிறந்த மற்றும் மிகவும் பயிற்சி பெற்ற ஊழியர்களாக உள்ளனர், மேலும் அவர்களும் படித்தவர்கள்.
தகவல்களின்படி, அம்பானி குடும்பம் ஒவ்வொரு வீட்டுப் பணியாளருக்கும் அவரவர் திறமைக்கேற்ப ஊதியம் வழங்குகிறது. இங்கு பல ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.2 லட்சம் என்பது தெரிய வந்துள்ளது.