கோட் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா

24 6729f86c5193c 13

கோட் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. கங்கை அமரனின் மகனான இவர் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்தார்.

இதை தொடர்ந்து சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், மங்காத்தா படம் தான் வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் மாபெரும் திரைப்படமாக அமைந்தது. அஜித் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் இன்று வரை ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தளபதி விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடியது. இன்று இயக்குனர் வெங்கட் பிரபு 49வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 30 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தை இயக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version