ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளதை இன்று அவரே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜிடம் ‘ஜன நாயகன்’ படத்தில் அவர் நடித்திருப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்:
வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ஜன நாயகனில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கும்படி அழைத்தார்கள்.. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும், என்று புன்னகையுடன் தெரிவித்தார்.
இதன்மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 9 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது.
படத்திற்கான தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் நீடிக்கும் இழுபறி காரணமாக இதுவரை படம் வெளியாகவில்லை. தணிக்கை குழுவின் அனுமதி கிடைத்தவுடன் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதான மிக முக்கியமான படமாக இது கருதப்படுவதால், தணிக்கை மற்றும் வெளியீடு தொடர்பான செய்திகளை ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.