24 66e50885dcdcf
சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா.. ஹீரோ யார் தெரியுமா

Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் ஜொலித்து வருகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என தனுஷ் நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நான்கு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்படம் என்பதை நாம் அறிவோம்.

இதில் முதல் முறையாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருக்கும் தேசிய விருது கிடைத்த திரைப்படம் என்றால் அது ஆடுகளம் தான். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இதுவே அவருடைய அறிமுக தமிழ் திரைப்படமாகும். ஆனால், நடிகை டாப்ஸிக்கு முன்பு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வானவர் நடிகை திரிஷா தான்.

ஆம், நடிகை திரிஷா தான் இப்படத்தில் கதாநாயகியாக சில நாட்கள் நடித்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், சில காரணங்களால் திரிஷா படத்திலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக டாப்ஸி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆடுகளம் படத்தில் தனுஷ் – திரிஷா இணைந்து நடிக்கமுடியாமல் போன நிலையில், அரசியல் கதைக்களத்தில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் தனுஷ் – திரிஷா ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
large images 2022 11 24t235258277 55463
சினிமாபொழுதுபோக்கு

பாடகி சின்மயி வீடு மற்றும் திருச்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் புரளிகள் என உறுதி – காவல்துறை தீவிர விசாரணை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு...

article l 20251131313035347033000 xl
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் சமியுக்தாவுக்கு இரண்டாவது திருமணம்: சிஎஸ்கே வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்தை மணக்கவிருப்பதாக தகவல்!

‘பிக் பாஸ் தமிழ்’ நான்காவது சீசனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான நடிகை சமியுக்தா, தனது இரண்டாவது...

1851465 rajinikanth
சினிமாபொழுதுபோக்கு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது: 50 ஆண்டு கால சினிமாச் சேவைக்காக கௌரவம்!

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International...