17487029380
சினிமா

மீண்டும் ஒன்றிணைந்த தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி..! இன்ஸ்டாவில் வைரலான புகைப்படங்கள்..!

Share

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2022ம் ஆண்டில் தங்கள் விவாகரத்தைக் அறிவித்தனர். இந்த முடிவு அவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் புதிய பாதையை தொடங்கியிருந்தாலும், இருவருக்கும் மகன்கள் மீது இருந்த அன்பு ஒருபோதும் மாறவில்லை என்பதனை பலமுறை நிரூபித்துள்ளனர்.

அந்த உணர்வை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள் தனுஷும் ஐஸ்வர்யாவும். தங்கள் மூத்த மகனான யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில், இருவரும் ஒரே மேடையில், ஒரே புகைப்படத்தில் சேர்ந்திருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா, சென்னையில் உள்ள American International School-ல் தனது பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதற்கான graduation ceremony அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரே இடத்தில் கலந்துகொண்டனர். விழாவின் போது, தங்களது மகனை இருவரும் சேர்ந்து கட்டியணைக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...