இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தாம் தூம்’ திரைப்படம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) கதையின் நாயகனாக நடித்த இந்தப் படத்தில், பொலிவூட் நட்சத்திரம் கங்கனா ரனாவத், ராய் லக்ஷ்மி, ஜெயராம் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான “அன்பே என் அன்பே”, “யாரோ மனதிலே” போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் அழகிய பின்னணியில் படமாக்கப்பட்ட காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் இந்தப் படத்தின் தனிச்சிறப்பாகும்.
தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, இந்தப் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு (Remastered), 5.1 ஆடியோ தரத்துடன் மெருகேற்றப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிரம்மாண்டமாக மீண்டும் வெளியாகவுள்ளது. பழைய நினைவுகளைத் திரையரங்கில் மீட்டுருவாக்கம் செய்யக் காத்திருக்கும் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தியாக அமைந்துள்ளது.