ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சூப்பர்ஸ்டார் படத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடனேயே அப்படத்தின் பிசினஸ் ஆரம்பித்துவிடும்.
ஆடியோ ரைட்ஸ், OTT மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்துமே விற்பனை ஆகிவிட்ட நிலையில், கடந்த மாதத்தில் இருந்து கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. மாபெரும் தொகைக்கு இப்படம் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஆல் டைம் ரெக்கார்டு செய்யும் அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது கூலி.
ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு ரூ. 81 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த எந்த திரைப்படத்தை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளிநாட்டில் வாங்கியது இல்லை. இதன்மூலம் மாபெரும் சாதனையை கூலி திரைப்படம் படைத்துள்ளது.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, ஷோபின் சபீர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.