tamilni 522 scaled
சினிமாசெய்திகள்

கேட்காமலே அள்ளிகொடுப்பவர் கேப்டன்… வாழ்ந்தவரை நல்லவராக வாழ்ந்தவர்…

Share

புரட்சி தலைவர் , நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இவர்களின் மீதுள்ள பற்றின் காரணமாக அவர்களின் பெயர்களின் பாதிப் பெயரை எடுத்து புரட்சிக்கலைஞர் என வைத்துக் கொண்டார். ஏழைகளின் இளவரசன் என்று அழைக்கப்படும் இவரின் கையால் தர்மம் வேண்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தர்மம் செய்தவர் .

விஜயகாந்தைப் பற்றி நடிகர் வையாபுரி பல தகவல்களை கூறினார். வையாபுரி கல்யாணத்திற்க்கு வந்து தாலி எடுத்துக் கொடுத்தாராம் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் தேர்தலில் விஜயகாந்த் ஜெயித்ததும் அவரை பார்க்க வையாபுரி குடும்பத்தோடு சென்றாராம். அதற்கு விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து விட்டாயா? என்று கேட்டாராம். இல்லை முதலில் உங்களை சந்தித்த பிறகு போகலாம் என இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு விஜயகாந்த் இல்ல இல்ல முதலில் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு என்னை வந்துப் பார் என்று சொல்லி அனுப்பிவைத்தாராம்.

இப்படி வாழும் வரை மற்றவர்களுக்கு நல்லவனாகவே வாழ்ந்தார் விஜயகாந்த். மேலும் வையாபுரி கள்ளழகர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மிகவும் பீக்கில் இருந்தவர் வையாபுரி. அந்தப் படத்தின் ஒரு பாடலை மூன்று நாள்கள் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம்.மறு நாள் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் சூட்டிங்கும் நடந்ததாம். அதிலும் வையாபுரி நடிக்க உடனே விஜயகாந்த் ‘இந்தப் படத்திற்கான சூட்டிங் முடிய லேட் ஆகும். ஆகவே நீ முதலில் அந்தப் படப்பிடிப்பை முடித்து விட்டு வா ’ என சொல்லி ஒரு காரில் அனுப்பி வைத்தாராம் என்று வையாபுரி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...