‘தக் லைஃப்’ படத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் பிரபல நடிகர்கள்! இதற்கு கமலின் அரசியல் ஒரு முட்டுக்கட்டையா?
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருந்தார். அதற்கு காரணம் ஜெயம் ரவிக்கு அந்த படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், துல்கர் சல்மானின் கேரக்டர் டம்மியாக காணப்பட்டது என்பதாலும் அவர் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
இவ்வாறான நிலையில், தற்போது ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் குளறுபடிகளால் தான் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காதலிக்க நேரமில்லை, ஜெனி உள்ளிட்ட படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்த வருகிறார்.
அதேவேளை, ‘தக் லைஃப்’ படத்தில் கமல், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நடிப்பதால் இந்த படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும், துல்கர் சல்மானை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் விலகி உள்ளார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைத்து உள்ளதோடு, கமல்ஹாசனின் அரசியல் ஈடுபாடுகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாமென சில தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- 21 savage thug life
- 2pac thug life
- 2pac thug life song
- best thug life
- gta 5 real life mod
- gta 5 thug life
- gta 5 thug life compilation
- gta 5 thug life moments
- Life
- lyrics thug life
- melhores thug life
- pac thug life
- rod wave thug life
- thug
- thug life
- thug life 21 savage
- thug life ft ynv
- thug life lyrics
- thug life rod wave
- thug life videos
- thug life vine
- thug life vol
- thug life volume
- thug life ynv
- thug life: volume 1
- unexpected thug life