2
சினிமாசெய்திகள்

உங்களிடமிருந்து கற்று கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும்.! வைரல் ஆகும் சூரியின் பதிவு…!

Share

சூரி நடிப்பில் வெளியான “மாமன்” திரைப்படம் வெற்றி நடைபோட்டு வருகின்றது. இந்த படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . மேலும் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வருகின்றது . இந்நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் தலைப்பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருக்கின்றது . மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர் மற்றும் கீதா கைலாசம் ஆகியோர் நடித்து இருந்தனர் . இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார்.

மேலும் சூரி தனது எக்ஸ்தளப்பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. “என் அக்காவுக்கு அன்பு நன்றிகளும்” உங்கள் நடிப்பு என் மனதை கவர்ந்துள்ளது, அக்காவாகவும் ,லட்டுவினுடைய அம்மாவாகவும்,நல்ல மகளாக , நல்ல மனைவியாகவும் என உங்களுக்கு தரப்பட்ட வேடத்தினை நல்ல முறையில் நடித்து இருந்தீர்கள்.

மேலும் நீங்கள் நடித்து இருந்த ஒவ்வொரு காட்சியும் உணர்வுபூர்வமானதாகவும் இருந்தது. உங்களுடன் நடித்த எனக்கு நல்ல அனுபவமாகவும் போட்டியாகவும் இருந்தது. நீங்கள் இந்திய சினிமாவிற்கு கிடைத்த அரிய செல்வம் எனக் குறிப்பிடத்துடன் உங்களிடமிருந்து கற்று கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...