17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

Share

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. மூத்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பைல்வான் ரங்கநாதன் அவர்கள் வழங்கிய நேர்காணலில், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் பிற பிரபலங்களின் பெயர்கள் கலந்த ஒரு பெரும் வழக்கின் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பொதுவாகவே, கொக்கைன் போதைப்பொருள் என்பது மிகவும் ஆபத்தானதும், விலை உயர்ந்ததும். ஒரு கிராம் கொக்கைனின் விலை சுமார் 12,000 ஆகும். இது ஒரு மாதத்திற்கு ஒருவரை பசியின்றி வைத்துவிடும், அதனால் சில நடிகர்கள் உடலை ஒல்லியாக வைத்திருக்க இதனைத் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். போதைப்பொருள் கொக்கைன், கோக்கோ தாவரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு அந்த பெயர் வந்திருக்கிறது. இது நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கும் தன்மையுடையது, இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் மூன்று ஆண்டுகளில் பயங்கரமான உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் கூறும்போது விசாரணையின் போது, Whatsapp குழுகள் மற்றும் ‘கோடு வார்த்தைகள்’ பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளதானும், முக்கியமான மெசேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளதானும் போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனால் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் சில பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இக்கேஸில், சினிமா பிரபலங்கள் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று எழுத்து நடிகர் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதேபோல், நடிகைகளும் இதன் போது பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. மன உளைச்சல், தொழிலில் எதிர்பார்ப்புகள், உடல்நலக் கவலைகள் போன்றவை போதைப்பொருளை நோக்கிச் செல்ல வழிவகுத்துள்ளன கூறியிருந்தார் பைல்வான் ரங்கநாதன்.

பைல்வான் ரங்கநாதன் குறிப்பிடும் வகையில், தற்போதைய சினிமா உலகில் பார்ட்டிகள்,மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்கள் உபயோகித்தல் ஒரு பாமரமாகி விட்டதாகவே தோன்றுகிறது. அவர் கூறுவது போல, பாரம்பரியமாக இருந்த ‘பார்ட்டி கலாச்சாரம்’ இப்போது ‘போதைய கலாச்சாரம்’ ஆக மாறியுள்ளது. நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர்கள் பலரும் இக்கலை விழாக்களில் கலந்துகொள்கின்றனர். ஆனால் இது அவர்களை குற்றவாளிகளாக்காது. ஆனால் விசாரணை தீவிரமாக நடப்பதால், உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிறது.

நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இது மேலும் பல பிரபலங்களை இந்த விசாரணையில் இழுத்து கொண்டு செல்லக்கூடிய வகையில் இருக்கிறது. “பொதுவாக மக்கள் பயன்படுத்த முடியாத ஒரு போதைப்பொருள் இது. பசியைத் தூண்டாததால், சிலர் உடல் பருமனை தவிர்க்க பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது உடல் நலத்தையே அழிக்கும்.” என்கிறார் பைல்வான் ரங்கநாதன். இவை தவிர, சில கருப்பு நாடுகளில் இருந்து கென்யா போன்ற இந்த கொக்கைன் இந்தியாவிற்கு கடத்தப்படுவதும், பெரும்பாலும் பெண்கள் கடத்தலில் ஈடுபடுவது போன்ற செய்திகளும் வெளியாகியுள்ள .

இந்த கொக்கைன் வழக்கு தற்போது தமிழ் சினிமா துறையின் பல அடுக்குகளை தோளுருவி பார்‌த்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான சினிமா பிரபலங்கள் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. போதைப்பொருள் விபத்து சினிமா மட்டுமல்லாது, சமுதாயத்தையே பாதிக்கக்கூடியதாக இருப்பதால், இது தொடர்பான விசாரணைகள் விரைவில் நிறைவு பெறும் என்று மக்கள் கருத்தாக இருக்கின்றது .

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

25 68625e1f18a45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 93 வயது மூதாட்டி வழக்கில் திருப்பம்: 65 வயது நபர் கைது

பிரித்தானியாவில் 93 வயது மூதாட்டி கொலை வழக்கில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ன்வாலில் உள்ள...