tamilni 93 scaled
சினிமாசெய்திகள்

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’…! குணா குகையை தேடி படையெடுக்கும் டூரிஸ்ட்

Share

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’…! குணா குகையை தேடி படையெடுக்கும் டூரிஸ்ட்

மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. சுமார் 10 நாட்களில் 90 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் மஞ்சும்மல் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர் குணா குகையில் சிக்கிக் கொள்ள, அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை.

அதிலும் இந்த படத்தில் இடம்பெறும் குணா படத்தின் பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலுக்கு இப்போதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பட குழுவினரை நேரில் சந்தித்து கமலஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் உட்பட பலர் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து குணா குகையை பார்ப்பதற்காக பயணிகள் படையெடுத்துள்ளார்கள்.

அதன்படி தற்போது சமூக வலைதளங்களில் குணா குகைக்கு செல்லும் பயணிகள் மற்றும் இளைஞர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...