சினிமா

தங்கலான் படத்தில் நடிப்பதற்கு மாளவிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

re 66bf3cd6bff27
Share

தங்கலான் படத்தில் நடிப்பதற்கு மாளவிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தங்கலான் திரைப்படம் தான் முதன்முதலாக 26.44 கோடி ரூபாயை முதலாவது நாளில் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தங்கலான் திரைப்படமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக காணப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் சியான் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

பா. ரஞ்சித் இயக்கிய இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை பலரின் உழைப்புகளுக்கு மத்தியில் தங்கலான் திரைப்படம் வெளியானது. உலக அளவில் கிட்டத்தட்ட 2000 தியேட்டர்களில் இந்த படம் வெளியானதாம்.

தங்கலான் திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன. ஒரு சிலர் இந்த படம் புரியவில்லை என்றாலும் இந்த படத்தை விக்ரமின் நடிப்புக்காகவே பார்க்கலாம் என கூறி வருகின்றார்கள்.

இந்த நிலையில் தங்கலான் படத்தில் நடிப்பதற்காக நடிகை மாளவிகா மோகனன் வாங்கிய சம்பளம் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மாளவிகா மோகனன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...