tamilni 99 scaled
சினிமாசெய்திகள்

ராதா ரவி ரொம்ப தவறான ஆளு.. அவர் இருக்கும் காம்பவுண்டுக்கு நான் போக மாட்டேன்! சின்மயி காட்டம்

Share

ராதா ரவி ரொம்ப தவறான ஆளு.. அவர் இருக்கும் காம்பவுண்டுக்கு நான் போக மாட்டேன்! சின்மயி காட்டம்

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர் சங்க தேர்தலில் தலைவராக ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்வரும் மார்ச் 17ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் ராதா ரவி பேசியுள்ளார்.

அதன்படி அவர் பேசும்போது செய்தியாளர் ஒருவர் சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்ப அதற்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார் ராதா ரவி.

அதாவது, சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை. ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும் ஆனால் அவர் கட்டவில்லை. அவ்வாறு கட்ட இல்லை என்றால் மெம்பர்ஷிப் காலாவதி ஆகிவிடும். சந்தா கட்டாததால் தனது உரிமை அவரே இழந்துவிட்டார். அவர் மீண்டும் வந்தால் சங்கத்தின் கட்டிடத்திற்கு வெளியே தான் நிக்க வேண்டும். நிச்சயமாக அவரை காண்பவுண்டில் சேர்க்க மாட்டோம் என்று காட்டமாக பேசியிருந்தார்.

இதை கேட்ட சின்மயி தனது எக்ஸ் தள பக்கத்தில், மலேசியா நாடு வழங்காத போலி டத்தோ பட்டத்தை தனக்குத்தானே ராதாரவி சூட்டிக்கொண்டார். டத்தோ வளாகம் என்று பெயரிடப்பட்ட டப்பிங் ஜூனியர் காம்பவுண்ட் அந்த கட்டிடத்தையே சட்டத்திற்கு புறம்பானது என சென்னை மாநகராட்சி சீல் வைத்து தரைமட்டம் ஆக்கியதாக கூறியுள்ளார்.

மேலும், யூனியன் உறுப்பினர்களின் உழைப்பில் இருந்த எடுத்த காசு மண்ணோடு மண்ணா போச்சு. ராதாரவி போன்ற தவறான நபர்கள் இருக்கும் இடத்திற்கு நான் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என கடுமையாக விளாத்தி தள்ளியுள்ளார் சின்மயி.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...