தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவரது இறந்த நாள் முதல் குக் வித் கோமாளி புகழ் மற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார், இவரைப் போல பலரும் விஜயகாந்த் நினைவாக பலருக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
நடிகர் விஜயகாந்த், ஒரு ஹோட்டலில் காபி விலை கேட்டு பெட்டியுடன் வெளியேறிய சம்பவம் குறித்து ஒரு பிரபலம் தற்போது ஷேர் செய்துள்ளார்.
விஜயகாந்த் நடித்த பல படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்றிய ராம வாசு ஒரு பேட்டியில், வாஞ்சிநாதன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜியில் நடந்து கொண்டிருந்தது.
அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் வேறு ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். காலை 6 மணி இருக்கும், அப்போது லுங்கியுடன் கையில் பெட்டியுடன் கேப்டன் வந்து கொண்டிருந்தார், என்ன சார் ஆனது என கேட்டேன்.
நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் நானும் அங்கேயே வந்துவிடுகிறேன் என்றார். ஏன் என கேட்டதற்கு, அவன் ஒரு காபிக்கு ரூ. 80 போடுறான் பா, ரூ. 80க்கு காபி குடித்துவிட்டு என்ன பண்றது, நான் இங்கே வந்துவிடுகிறேன்.
இங்கே உள்ள காபியே போதும் என எங்களுடன் வந்து தங்கிவிட்டார் என கூறியுள்ளார்.