சினிமாசெய்திகள்

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

8 4
Share

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

இணைய அச்சுறுத்தல் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதன்முறையாக இந்தியாவின் (India) பெயரை வெளியிட்டுள்ளது.

கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையை அந்நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.

தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எதிரி நாடுகளின் பெயர்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன. சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கும், கனடாவிற்கும் மோதல் முற்றி வரும் நிலையில், முதல் முறையாக இந்தியாவை இணைய அச்சுறுத்தல் எதிரி நாடாக சேர்த்தது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்திக்கையில், “இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கருத்தை உருவாக்குவதற்காக இது போன்று வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

எந்த ஆதாரமும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டை கனடா எழுப்புகிறது” என்று தெரிவித்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

எனினும் இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் கனடா அரசு வழங்காத நிலையில் கடந்த ஓராண்டாக இந்தியா – கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த 29ஆம் திகதி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை அபத்தமானது, ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...