திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் சிறப்பு நிபுணர் குழுக்கள் உடனடியாக இருவரது வீடுகளுக்கும் விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நடத்தப்பட்ட சோதனையில், விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்துக் காவல்துறை தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற மிரட்டல்கள் பொதுமக்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகின்றன.