பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் பாடகி பவதாரிணியின் உடல்

tamilni 422

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் பாடகி பவதாரிணியின் உடல்

மறைந்த பின்னணி பாடகரான பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியுமானவர் பாடகி பவதாரிணி.

புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென்று சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் உயிரிழந்த பாடகி பவதாரிணியின் உடல் விமானம் மூலம் இன்று சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் அமைந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவு சொந்த ஊரான தேனிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி கிரியை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Exit mobile version