தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி.
நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் ஷாரிக் சினிமாவில் 2016ம் ஆண்டு பென்சில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஷாரிக் பென்சில் படத்தை தாண்டி டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் என சில படங்கள் நடித்துள்ளார்.
ஷாரிக் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது நீண்ட நாள் காதலி மரியாவை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த சில மாதங்களாக மரியா கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு கடந்த ஜுன் 28ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஷாரிக் தனது மகனுடன் எடுத்த அழகிய புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.