24 66bb35fe47a79
சினிமா

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா

Share

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீரா. இந்த சீரியலில் வைஷ்ணவி அருள்மொழி மற்றும் அருண் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் பசங்க படத்தில் நடித்த சிவகுமார் மற்றும் சின்னத்திரையிலும் முக்கிய நடிகையாக இருக்கும் லட்சுமி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர்.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சீரியல் துவங்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இந்த சீரியலில் கதாநாயகியின் தோழியாக நடிகை அபிராமி என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது.

வீரா சீரியலின் தற்போதைய கதைப்படி, வீராவிற்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு வீராவின் தோழியாக வருகை தந்துள்ளார் நடிகை அபிராமி.

விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை அபிராமி.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்து. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...