33 5
சினிமா

நடிகர் விக்ரமிற்கு வந்த ரூ. 1000 கோடி பட்ஜெட் படம்… அப்படி என்ன படம்?

Share

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு ஸ்கோப் இருக்கும் படங்களாக தேர்வு செய்து ரசிகர்களை அசத்தி வருபவர் தான் நடிகர் விக்ரம்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றதா என்றால் இல்லை ஆனால் இவரது நடிப்பை, உழைப்பை பாராட்டாத ரசிகர்கள் இல்லை.

தற்போது இவருக்கு ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்ஆர்ஆர் பட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்ட படம் இயக்கி வருகிறர்.

பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் தான் விக்ரமை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

மகேஷ் பாபுவின் மாஸ் இமேஜுக்கு நிகரான ஒரு கோலிவுட் நடிகரை தேர்வு செய்ய விரும்பிய ராஜமௌலி, விக்ரம் அதற்கு கச்சிதமாக பொருந்துவார் என கருதி உள்ளாராம்.

இந்த கூட்டணி உறுதியானால் மகேஷ் பாபுவும் விக்ரமும் முதல் முறையாக இணையும் படமாக இது இருக்கும். ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
34 6
சினிமா

கண் கலங்கிவிட்டது.. மேடையில் எமோஷ்னலாக பேசிய சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படத்தின்...

33 6
சினிமா

புதுப் பையன் இல்லை, உங்கள் வேலையை பாருங்கள்.. கமலுக்கு சிம்பு கொடுத்த அதிரடி ரிப்ளை

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்....

32 6
சினிமா

ஸ்ரீலீலா இல்லை.. அந்த குத்துப்பாடலுக்கு நடனமாட இருப்பது இந்த முன்னணி நடிகையா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின்...

31 6
சினிமா

வெளிவந்தது நடிகை தமன்னாவின் அடுத்த பட அதிரடி அப்டேட்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும்...