வசமாக சிக்கிய கோபி! கொந்தளித்த பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடக்கபோவது இதுதான்

7 14

வசமாக சிக்கிய கோபி! கொந்தளித்த பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடக்கபோவது இதுதான்

சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் தற்போதைய கதைகளம்படி பாக்கியாவின் தொழிலை முடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் கோபி.

அதற்காக தன்னுடைய ஆள் ஒருவரை பாக்கியாவின் உணவகத்திற்கு அனுப்பிவைத்து சூழ்ச்சி திட்டங்களை போட்டு பாக்கியவை கடுமையான சிக்கல்களில் மாட்டிவிட்டார். இதுமட்டுமின்றி பிள்ளைகள் பாக்கியவிடம் இருந்து பிரிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் பாக்கியாவின் உணவகத்திற்கு கோபி அனுப்பிவைத்த ஆள், பாக்கியவிடம் சிக்கிக்கொள்கிறார். தன்னுடைய உணவகத்தில் நடந்த அனைத்து தவறுகளுக்கும் காரணம் கோபி தான் என பாக்கியாவிற்கு தெரியவர, கோபி நேரில் சென்று எச்சரிக்கிறார் பாக்கியா.

உண்மை என்னவென்று தெரியவந்த நிலையில், கோபியின் தாய் ஈஸ்வரி, மனைவி ராதிகா உள்ளிட்ட அனைவரும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Exit mobile version