பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள 6 போட்டியாளர்களும் இவர்கள் தானா?- வெளியாகிய அப்டேட்

org 48024202008271521

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் உள்ளே வந்தனர்.

இதனால் ஆரம்பம் முதலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது .இந்த நிகழ்ச்சியிலிருந்து 16 லட்சம் பணப் பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது,விசித்ராவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார். விசித்ரா எலிமினேட் ஆகிப்போனதால் ரசிகர்கள் பலரும் தமது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள ஆறு போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஷ்ணு,விஜய் வர்மா,தினேஷ்,மாயா, அர்ச்சனா, மணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version